Latest News
Home / இலங்கை / பிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர் : சாதனைப் பின்னணி!!

பிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர் : சாதனைப் பின்னணி!!

பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார்.

இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே, வெறும் 17 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதே ஆதரவு தமக்கு தொடர்ந்து கிடைத்துவரும் எனில் தம்மால் ஒரு நாள் மில்லியனர் ஆக முடியும் என்ற நம்பிக்கையையும் Ino Ratnasingam வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை அமெரிக்காவில் இருந்து இவர் இறக்குமதி செய்கிறார். பிரித்தானியாவில் பொதுவாக விற்கப்படாத தின்பண்டங்களை மட்டுமே தமது கடையில் விற்பனைக்கு வைப்பதாக கூறுகிறார் இந்த இளைஞர்.

எசெக்ஸ், ஹாட்லீ பகுதியில் அமைந்துள்ள தமது முதல் முயற்சி மிகுந்த ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது தமது இரண்டாவது கடையை Canvey Island பகுதியில் மிக விரைவில் திறக்க உள்ளார்.

கேன்வே தீவு மற்றும் எசெக்ஸ் பகுதி மக்கள் எங்களது தயாரிப்புகளுக்கு பைத்தியமாக இருப்பது மிகுந்த ஊக்கத்தை தருவதாக கூறும் Ino Ratnasingam,

தனது அப்பாவுக்கு ஏற்கனவே தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை இருந்ததாகவும், அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே, இந்த புதுவித முயற்சி எனவும், ஆனால் மகத்தான வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *