Latest News
Home / இலங்கை / தற்கொலையினால் இலங்கையில் 40 நொடிக்கு ஒருவர் இறப்பு இறப்பு – வருடத்திற்கு 4000 ஆயிரம் பேர்வரையில் இழப்பு

தற்கொலையினால் இலங்கையில் 40 நொடிக்கு ஒருவர் இறப்பு இறப்பு – வருடத்திற்கு 4000 ஆயிரம் பேர்வரையில் இழப்பு

வி.சுகிர்தகுமார்  

  உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று 10) நடைபெற்றது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவா ஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலையின் உளநலப்பிரிவு பதில் பொறுப்பு வைத்தியர் எம்.ஜெ.நௌபல், வைத்தியர் சுமதி றெமன்ஸ், வைத்தியர் நபில் இல்லியாஸ் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தற்கொலை என்பது உள்நோக்கோடு ஒருவர் தம்மை தாமே மாய்த்துகொள்வது என்பதாகும். கடந்த 45 வருடகால இடைவெளயில் தற்கொலை மூலமான இறப்பு வீதம் 60 ஆக அதிகரித்துள்ளது என  தெரிவிக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் மரணத்திற்கு காரணமாக போர் கொலை, புற்றுநோய் போன்றவற்றை விட 10ஆவது முக்கிய காரணியாக தற்கொலை விளங்குவதாக விளக்கமளிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை மூலம் தமது உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

இதேநேரம் நமது நாட்டை பொறுத்தவரை தற்கொலையினால் 40 நொடிக்கு ஒருவர் இறப்பதுடன் வருடத்திற்கு 4000 ஆயிரம் பேர்வரையினால் இழப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் 15 தொடக்கம் 29 வரைக்குட்பட்ட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு உயிரியல் உளவியல் மற்றும் சமூக ரீதியான காரணிகளே செல்வாக்கு செலுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதன் அடிப்படையில் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் முதலிடத்திலும் மதுபழக்க அடிமை, போதைவஸ்து பாவனை, பெற்றோர் கண்காணிப்பு போதாமை உள்ளிட்ட காரணிகளும் முறையே அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *