1. சுற்றளவு
தளவுரு ஒன்றின் சுற்றிவர உள்ள நீளம் சுற்றளவு எனப்படும்.
இனி நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்றுபார்ப்போம்.
முதலில் செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.
செவ்வகத்தின் எதிர்பக்கத்தில் உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதைஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச்சுற்றி அளந்தால் (7+3+7+3 = 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.
செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம் + 2 மடங்கு அகலம்
ஆகவே செவ்வகத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு .
சதுரம் ஒன்றின் சுற்றளவைக் காணல்
சதுரம் ஒன்றின் நான்கு பக்க நீளங்களும் சமன் என்பதை ஞாபகப்படுத்துங்கள்.
இந்தச் சதுரத்தின் நீளம் = 5 , அகலம் =5 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால்(5+5+5+5 = 20) ஆகவே இச் சதுரத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.
ஆகவே சதுரத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு .
அடுத்ததாக நாம் முக்கோணியின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம்.
முக்கோணியின் சுற்றளவானது , முக்கோணியின் மூன்று பக்கத்தையும்கூட்டுவதன் மூலம் பெறப்படும்.
உ + ம்:
உருவில் உள்ள முக்கோணியின் சுற்றளவு = 9 + 11 + 10 = 30 cm
அடுத்ததாக நாம் வட்டத்தின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம்.
வட்டத்தின் சுற்றளவு பரிதி எனப்படும் , உதாரணத்திற்கு கீழே உள்ள வட்டத்தைகருதுக.
ஆரைச் சிறை ஒன்றின் சுற்றளவை அளத்தல்.
தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 01
தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 02
தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 03