Latest News
Home / தொழில்நுட்பம் / Galaxy A32 வினை 64MP Quad கமரா மற்றும் சுமூகமான 90Hz டிஸ்ப்ளே உடன் இலங்கையில் அறிமுகம்

Galaxy A32 வினை 64MP Quad கமரா மற்றும் சுமூகமான 90Hz டிஸ்ப்ளே உடன் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் அதிக நன்மதிப்பினைப் பெற்ற ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமாக விளங்கும் Samsung, இன்று தமது புதிய Galaxy A32 இன் அறிமுகத்தினை அறிவித்தது. புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலான கமரா வடிவமைப்பு, தள வடிவமைப்புடன் Galaxy A32 ஆனது சிறந்த தரமான 64MP Quad Camera, 5000mAh battery, அழகிய 6.4″ FHD+ sAMOLED screen என்பவற்றைக் கொண்டுள்ளது. அத்தோடு 90Hz refresh rate உடனான சுமூகமான in-app navigation, browsing மற்றும் gaming உள்ளடங்கலாக மேலும் பல்வேறுபட்ட புத்தாக்க அம்சங்களைத் தன்னகத்தேக் கொண்டிருப்பதனால் ஆராய்தலையும் சிறந்து விளங்க விரும்புதலையும் கொண்ட இளைஞர்களின் தெரிவாக இது விளங்குககிறது.

சிறந்த கமரா

Galaxy A32 ஆனது சிறந்த படங்களை எடுத்திடக்கூடிய பல்திறன்கொண்ட 64MP quad-camera வினைக் கொண்டுள்ளது. இதன் பின்பக்க 64MP பிரதான கமரா மிகவும் துல்லியமான மற்றும் தெளிவான படங்களை முழு நாளும் எடுத்திட உதவுகிறது. இது மிகவும் துல்லியமான மற்றும் தெளிவான படங்களை முழு நாளும் எடுத்திட உதவுகிறது. இதன் 8MP ultra-wide lens லென்ஸ், 123- பாகை தளக் காட்சியினை வழங்குவதால் எடுக்கும் படத்திற்கு அதிக பார்வையை வழங்குகிறது. 5MP macro lens உடன் மிகவும் துல்லியமான close-up படங்களை எடுக்கக்கூடியதாக இருப்பதுடன், 5MP depth camera உடன் அழகிய portrait படங்களை Live Focus mode இல் எடுத்திட முடியும். Galaxy A32 ஆனது hyperlapse, night mode, slow-mo, panorama மற்றும் pro mode போன்றவற்றுக்கும் ஆதரவு அளிக்கிறது. இது 20MP முன் பக்க கமராவுடன் வருவதால் கண்கவர் selfies இனை அதிக துல்லியத்துடன் எடுத்திட முடியும்.

சிறந்த ஸ்கிரீன்

Galaxy A32ஆனது இளைஞர்களுக்கு மற்றும் உள்ளடக்கத்தினை பிங்க் செய்ய விரும்புவோருக்கு ஒரு அற்புதமான அனுபவத்தினை வழங்குகிறது. அத்தோடு 6.4″ FHD+ sAMOLED Infinity-U screen என்பவற்றுடன் 90Hz refresh rate இனையும் கொண்டுள்ளது. இதன் மூலம் சுமூகமான scrolling மற்றும் gaming இற்கு உதவுகிறது. பிரகாசமான சூரிய ஒளியிலும் கூட தெளிவான காட்சிகளை எடுத்திடக்கூடிய 800 nits வரையான பிரகாசத்தினை வழங்குகிறது. நீங்கள் கேம் விளையாடுவதாக இருந்தாலும், விரும்பிய வெப் தொடர் நாடகங்களை பார்ப்பதாக இருந்தாலும் 20:9 என்ற விகிதத்தில் Dolby Atmos உடன் சினிமெடிக் காட்சி அனுபவித்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

சிறந்த பெட்டரி

நீண்ட கால பெட்டரி ஆயுளைக் கொண்டிருப்பதனால் அதிகம் பயணிக்கும் நுகர்வோருக்காக மேம்படுத்தப்பட்ட Galaxy A32 வின் 5000mAh பெட்டரி, 20 மணித்தியால வீடியோவினை காணக்கூடிய, 93 மணித்தியால மியுசிக் கேட்கக்கூடிய மற்றும் 19 மணித்தியால இணைய நேர பாவனையை வழங்குகிறது. Galaxy A32 ஆனது adaptive power management இனைக் கொண்டுள்ளதால் உங்கள் மொபைல் பாவனைக்கு ஏற்றவாறு பயன்பாட்டினை கண்டறிந்து அதனடிப்படையில் சக்தி தகைமையைச் சரிசெய்து கொள்கிறது. இதன் மூலம் பட்டரியின் ஆயுளை கூட்டுகிறது. Galaxy A32> adaptive fast charging உடன் வருகிறது. எனவே குறைவான நேரம் சார்ஜ் செய்து அதிக நேரம் பாவித்திட முடியும்.

சிறந்த செயற்திறன்

Galaxy A32 ஆனது மேம்பட்ட Octa-Core Mediatek Helio G80 processor இனைக் கொண்டிருப்பதனால் அதிக செயற்திறனைக் கொண்டுள்ளது. இதன் உட்பொருத்தப்பட்ட Game Booster software கேமிங் செயற்திறனை கண்காணிப்பதாலும், பட்டரி ஆயுள், வெப்பநிலை மற்றும் மெமரி பாவனை போன்றவற்றுக்கு ஏற்ப சரிசெய்வதாலும் சிறந்த கேமிங் அனுபவத்தினை வழங்குகின்றது.

Galaxy A32 இன் Android 11 மற்றும் One UI 3.1 உடன் உங்கள் விரல் நுனிகளில் இருக்கும் உங்களுக்கு மிகவும் முக்கியமான உள்ளடக்கங்களையும் அம்சங்களையும் கவனிக்க முடியும். இது in-display fingerprint sensor உடன் வருவதுடன் Samsung Knox பாதுகாப்புடன் உங்கள் டேடாவை பாதுகாக்கிறது. பாதுகாப்பு புதுப்பிப்புக்களை குறைந்தது 4 ஆண்டுகள் காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளதன் மூலம் Samsung ஆனது Galaxy யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

கிடைக்கக்கூடிய தன்மை

Galaxy A32 முற்றிலும் புதிய 2021 வடிவமைப்பில் தனித்துவமான camera housing மற்றும் நவீன யுகத்திற்கான Galaxy A தொடரைப் புதுப்பித்திடும் வகையில் மென்மையான, பளபளப்பான பூச்சுடன் வருகிறது. Awesome Black மற்றும் Awesome Blue ஆகிய இரண்டு கண்கவர் வர்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றன. அத்தோடு 6GB + 128GB மாதிரி ரூ. 57,199க்கும், 8+128GB மாதிரி ரூ. 64, 999 க்கும் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கப்பெறும். Galaxy A32 ஆனது John Keells Office Automation, Softlogic Mobile Distribution ஆகிய நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமும் மற்றும் Softlogic Retail, Singer, Singhagiri, Damro ஆகிய அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்களிடமும், Dialog மற்றும் Mobitel ஆகிய வலையமைப்பு பங்காளர்களிடமும், Samsung EStore, Daraz.lkv மற்றும் MySoftlogic.lk. ஆகிய ஒன்லைன் தளங்கள் மூலமும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *