Latest News
Home / விளையாட்டு (page 8)

விளையாட்டு

LPL போட்டித் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி

2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கு இதனை பதிவிட்டுள்ளார். பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

இலங்கை அணியின் முதல் இன்னிங்க்ஸ் நிறைவு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது நாள் …

மேலும் வாசிக்க

வலுவான நிலையில் இலங்கை அணி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன தனது 13வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழக்காமல் 132 ஒட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார். தனஞ்சய டி சில்வா …

மேலும் வாசிக்க

இரண்டாம் இடத்தை தனதாக்கிய இலங்கை

தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் டாக்காவில் உள்ள ஷாஹீத் சுஹ்ரவர்தி உள்விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் ஆரம்பமானது. இலங்கை, மாலைத்தீவு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் என நான்கு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியா அணி 6 ஆவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. அதனடிப்படையில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பதவி விலகுகின்றார் மிக்கி ஆர்த்தர்!

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக்கி ஆர்த்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய மிக்கி ஆர்த்தர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

மஹேல ஜயவர்தனவிற்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி

கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல …

மேலும் வாசிக்க

லங்கா பிரீமியர் லீக்கிற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டது குறித்து மஹேல அதிருப்தி!

எல்.பி.எல் இற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார். குசல் ஜனித் பெரேரா, சந்திமல், மத்தியுஸ், தனஞ்சய டிசில்வா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே மஹேல தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எல்.பி.எல் 2021 இற்கு மிகவும் சுவாரசியமான தெரிவுகளும் தெரிவின்மைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அடி முன்னோக்கி சென்ற பின்னர் ஐந்து அடி பின்னோக்கி சென்றால் நாடு முன்னேற்றம் …

மேலும் வாசிக்க

ரி-20 உலகக்கிண்ணம்: ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா அணி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில். இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆறுதல் வெற்றியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி, நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் நமீபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, …

மேலும் வாசிக்க

ரி-20 உலகக்கிண்ணம்: மாலிக்கின் அதிரடியால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 41ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. சார்ஜாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. …

மேலும் வாசிக்க

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டுவேன் ப்ராவோ ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் டுவேன் ப்ராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவில் ப்ராவோ ஓய்வுபெற்றார். ஆடவருக்கான 2 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் 3 ஐசிசி சம்பிய்ன்ஷ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் 7 ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் …

மேலும் வாசிக்க