Latest News
Home / விளையாட்டு (page 7)

விளையாட்டு

தனுஷ்க குணதிலகவின் இறுதி தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் அது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான தனுஷ்க குணதிலக, 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதுடன், இதுவரையில் 8 டெஸ்ட் போட்டிகளில் …

மேலும் வாசிக்க

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக குறித்த மூவருக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக?

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கட் சபைக்கு அவர் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி நியமங்களுடன் இனி விளையாட முடியாது என பானுக ராஜபக்ஷ குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை …

மேலும் வாசிக்க

19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: இந்தியக் கிரிக்கெட் அணி சம்பியன்!

19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாடிக் …

மேலும் வாசிக்க

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்தன இணைவதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண இருபதுக்கு இருபது …

மேலும் வாசிக்க

ஆஷஸ்: அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

  ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, …

மேலும் வாசிக்க

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் வெள்ளியன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் …

மேலும் வாசிக்க

சுழற்பந்தாளர்களிடம் சுருண்ட இலங்கை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் …

மேலும் வாசிக்க

காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது. காலி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 386 …

மேலும் வாசிக்க

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இலங்கை அணி 348 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களை அதிகபட்சமாக …

மேலும் வாசிக்க