Latest News
Home / உலகம் (page 12)

உலகம்

மே 10 – 24 வரை முழு ஊரடங்கு!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மே 10 ஆம் திகதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் திகதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை …

மேலும் வாசிக்க

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். …

மேலும் வாசிக்க

இந்தியாவில் கொரோனா உச்சம்- ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தைக் கடந்தது!

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாள் பாதிப்பு நான்கு இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 618 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு இரண்டு கோடியே 10 இலட்சத்து 70 ஆயிரத்து 852ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஒரேநாளில் மூவாயிரத்து 982 பேர் …

மேலும் வாசிக்க

சீனாவின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்!

சீனாவின் சினோவக் பயோடெக் தயாரித்த கொரோனா தடுப்பூசி 60 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு கொரோனா தொற்றைத் தடுப்பதில் திறமையானது என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். எனினும், குறித்த தடுப்பூசியால் கடுமையான பாதகமான விளைவுகளின் ஆபத்து குறித்து இன்னும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் மூலோபாய ஆலோசனைக் குழுவின் சுயாதீன வல்லுநர்கள், சீனா, பிரேசில், இந்தோனேசியா, துருக்கி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் …

மேலும் வாசிக்க

தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றதுடன் அதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ளதுடன் அவரது கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கவுள்ளது. …

மேலும் வாசிக்க

சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டதுடன் கொரோனா பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டுவரப் பிரார்த்திக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவார் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலையில் 125 இடங்களில் தி.முக. வென்றுள்ளது இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் …

மேலும் வாசிக்க

அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது- வடகொரியா எச்சரிக்கையுடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளை வடகொரியா நிராகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தனது விரோதச் செயல்களை மூடிமறைப்பதற்கான ஒரு மோசமான அடையாள அட்டையே இராஜதந்திரம் என வட கொரிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அமெரிக்க …

மேலும் வாசிக்க

அபார வெற்றியை நோக்கி தி.மு.க. – மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததுடன் தற்போது குறித்த கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போதைய நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணியில், தி.மு.க. 124 …

மேலும் வாசிக்க

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 56 இலட்சத்து 42ஆயிரத்து 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 670 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஜேர்மனியில் 34 இலட்சத்து 12 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20 ஆயிரத்து 141 …

மேலும் வாசிக்க