Latest News
Home / ஆலையடிவேம்பு / Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” இரண்டாவது நாளாக மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!

Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” இரண்டாவது நாளாக மிகவும் பயன்பெற சிறப்பானதாக இன்று!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக தனவந்தர்களிடம் இருந்து தன்னார்வமாக வழங்கப்படும் நிதி உதவியினை பெற்று சேமித்து கொரோனா நிலை எமது பிரதேசத்தில் தீவிரம் அடைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கல் எனும் தூரநோக்கு செயத்திட்டத்தினை.

மேற்கொண்டு விழிப்புணா்வினை ஏற்படுத்தி பிரதேச மக்களை கொரோனா வைரஸ் தொற்று கொடிய நோயில் இருந்து பாதுகாக்கும் முகமாக Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழு ஆகிய எங்களால் நேற்று (14) மற்றும் இன்றைய தினம் (15) ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிகிராமம், அளிக்கம்பை, கவடாப்பிட்டி, புளியம்பத்தை மற்றும் பனங்காடு ஆகிய பகுதியில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வானது கண்ணகிகிராமம் விக்னேஸ்வரர் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், இந்துமாமன்ற தலைவர் எஸ்.கனகரெத்தினம், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சுதாகரன்,  ஊடகவியலார் வி.சுகிர்தகுமார், கண்ணகிகிராம விக்னேஸ்வரர் ஆலய தலைவர் செல்வநாயகம் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.கோகுலன் என்பவர்களுடன் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு.

தொடர்ந்து Alaiyadivembuweb.lk இணையத்தளத்தின் நிர்வாக இயக்குனர் M.கிரிசாந் மற்றும் தலைவர் கபிஷன் அவர்களின் தலைமையில் இணையக்குழுவினரின் பங்கேற்புடன் அதிதிகளும் கலந்துகொண்டு விழிப்புணர்வு செயற்பாட்டை ஆரம்பித்து வைத்ததுடன் முகக்கவசத்தினையும் விழிப்புணர்வு துண்டுபிரசுத்தினையும் மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

மேலும் இச் செயத்திட்டமானது ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் என்பவற்றின் பங்களிப்புடனும் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாகவும் Alayadivembuweb.lk இணையத்தள இணைய குழுவினரினால் மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்ட விழிப்புணா்வுச் செயற்பாடானது மிகவும் பயன்பெற சிறப்பானதாக இடம்பெற்றது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *