Latest News
Home / ஆலையடிவேம்பு / 48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் மற்றும் சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை….

48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் மற்றும் சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை….

15ம் கிராமம் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக சிறப்பாக நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று பிரதேச ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

மேலும் துரதிஸ்டவசமாக சம்பியன்ஸ் விளையாட்டுக்கழம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் சிறப்பாட்ட நாயகனாக ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் டிலக்சன் அவர்களும் மேலும் போட்டித்தொடரின நாயகனாக ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சாந்தன் அவர்களும் மற்றும் போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் அஜித் அவர்களும்தெரிவாகி இருந்தனர்.

குறித்த சுற்றுத்தொடர் 48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றதுடன் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து சென்ற ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் ஆகியன இறுதி போட்டிவரை முன்னேறியதுடன் இறுதி போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிக்கொண்டமை பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகவும் காணப்படுகின்றது.

மேலும் குறித்த வெற்றிக்கிண்ணத்துடன் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினர் இவ்வருடத்தின் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் இரண்டாவது வெற்றிக்கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *