Latest News
Home / உலகம் / 3.5 மில்லியனை கடந்த நாளாந்த கொவிட் தொற்று!

3.5 மில்லியனை கடந்த நாளாந்த கொவிட் தொற்று!

உலகளவில் நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (21) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,595,136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் அமெரிக்காவில் இருந்து 727,414 தொற்றாளர்களும், பிரான்சில் இருந்து 317,536 தொற்றாளர்களும் இந்தியாவில் இருந்து 317,536 தொற்றாளர்களும் மற்றும் பிரேசிலில் இருந்து 205,350 தொற்றாளர்களும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியம், , இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் தினசரி 100,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர்.

கடந்த வாரம் மட்டும் உலகளவில் 18 மில்லியனுக்கும் அதிகமான ஓமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *