Latest News
Home / ஆலையடிவேம்பு / 2023 ஆம் ஆண்டுக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது….

2023 ஆம் ஆண்டுக்கான ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் 14 மேலதிக வாக்குகளால் பாரிய ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சபையின் அமர்வு நேற்று (10/11/2022) புதன்கிழமை தவிசாளர் த.கிறோஜாதரன் தலைமையில் இடம்பெற்றதுடன். 16 உறுப்பினர்கள் கொண்ட சபையில் ஒருவர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் கலந்து கொண்ட 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவாகவும் ஒருவர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இதன் மூலம் 14 மேலதிக வாக்குகளால் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான 2023 ஆம் ஆண்டுக்கான செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த வருடம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *