Latest News
Home / உலகம் / 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்!

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பம்!

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்சில் ஆரம்பமாகவுள்ளது.

பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம்(சனிக்கிழமை) குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே G7 மாநாட்டின் போது மூன்று வித அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, G7 மாநாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் பிரான்ஸில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *