Latest News
Home / உலகம் / 1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

169,000 முதல் 190,000 ரஷ்ய துருப்புக்கள் இப்போது உக்ரைனின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் சமீபத்திய வாரங்களில் ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கத் தயாராகலாம் என்று எச்சரித்துள்ளன.

ஆனால் ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தும் மறுத்துவருவதோடு துருப்புக்கள் பிராந்தியத்தில் இராணுவ பயிற்சிகளை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது.

 

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *