Latest News
Home / விளையாட்டு / 12,000 ஓட்டங்கள் – சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

12,000 ஓட்டங்கள் – சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய தலைவர் விராட் கோலி.

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் 3 வது ஒருநாள் ஆட்டம் கேன்பராவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற இந்திய தலைவர் கோலி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.​

இன்று 23 ஓட்டங்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார் இந்திய தலைவர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309 வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ஓட்டங்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ஓட்டங்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251 வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்கள் (இன்னிங்ஸ்)

242 விராட் கோலி
300 சச்சின் டெண்டுல்கர்
314 ரிக்கி பாண்டிங்
336 குமார் சங்கக்கார
379 சனத் ஜயசூர்ய
399 மஹேல ஜயவர்தன

விரைவாக ஒருநாள் ஓட்டங்களைக் கடந்த வீரர்

8000 ஒருநாள் ஓட்டங்கள் – கோலி
9000 ஒருநாள் ஓட்டங்கள் – கோலி
10000 ஒருநாள் ஓட்டங்கள் – கோலி
11000 ஒருநாள் ஓட்டங்கள் – கோலி
12000 ஒருநாள் ஓட்டங்கள் – கோலி

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *