Latest News
Home / சுவாரசியம் / வெறும் எட்டு வயதில் முதுமையினால் இறந்து போன சிறுமி..!! கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!

வெறும் எட்டு வயதில் முதுமையினால் இறந்து போன சிறுமி..!! கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!

உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற அரியவகை நோயினால் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் இந்த குழந்தைக்கு, புரோஜீரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள தற்போது இக்குழந்தையும் தாக்கியுள்ளது.

தற்போது, அந்த சிறுமி 80 வயதுக்கான முதுமையுடன் இருந்துள்ளார். வெறும் 7 கிலோ எடை கொண்ட அவள் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மேலும், மருத்துவமனையில் அந்த சிறுமியின் உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்தன. டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலன் அளிக்காததால் சிறுமி அன்னா சாகிடோன் பரிதாபமாக இறந்தாள்.இதுபற்றி, கண்ணீருடன் அவரின் தாய் இவானா கூறுகையில், “என் மகளை நல்ல உடல் நலத்துடன் இருக்க வைக்க, எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன்,” என்றார். உலகிலேயே மிக குறைந்த வயதில் முதுமை காரணமாக உயிரிழந்தவர் அன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *