Latest News
Home / தொழில்நுட்பம் / வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம்!

முகநூல் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான வாட்ஸ்ஆப்பில் அண்மையில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பலரும் விரும்பும் ஒரு வசதியும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, ஆர்க்கைவ்ட் சாட்ஸ் போல்டர் என்ற புதிய வசதி மூலம், உங்களுக்குத் தேவையாற்ற சாட்டுஸ்களை, நிரந்தரமாக மறைத்து வைக்க புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

வழக்கமாக, நாம் விரும்பாத அல்லது தேவையற்ற சாட்ஸ்களை ஆர்க்கைவ் செய்து வைத்திருப்போம். அது அப்போதைக்கு கீழே மறைந்திருந்தாலும், எப்போது அந்த எண்ணிலிருந்து புதிய தகவல் வருகிறதோ, அப்போது அது ஏனைய தகவல்களைப் போலவே முதல் வரிசையில் வந்து நின்று கொள்ளும்.

ஆனால், இந்த புதிய வசதியில், ஒரு முறை ஒரு எண்ணை ஆர்க்கைவ்வில் போட்டுவிட்டால், அது ஆர்க்கைவ்டு சாட்ஸ் பெட்டகத்தில் பத்திரமாக இருந்து கொள்ளும். புதிய தகவல்கள் அந்த எண்ணிலோ குழுவிலோ அனுப்பப்பட்டாலும், அது மேல் வரிசைக்கு வராமல், பத்திரமாக ஆர்க்கைவ்டு சாட்ஸ் பெட்டகத்திலேயே இருக்கும்.

எப்போது நீங்களாக அந்த எண்ணை ஆர்க்கைவ்டு பெட்டகத்திலிருந்து நீக்குகிறீர்களோ அப்போது மட்டுமே அது பட்டியலின் மேல் பகுதிக்கு வரும். எனவே, ஆர்க்கைவ்டு செய்த எண் அல்லது குழு எப்போதுமே அங்கேயே இருக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த புதிய வசதி மூலம் தேவையற்ற தகவல்கள் உங்கள் கண்ணில் படுவதிலிருந்து நீங்கள் தப்பிக்க வழி பிறந்துள்ளது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *