Latest News
Home / வாழ்வியல் / வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

பொதுவாக திருமணத்தின் போது மணமகனை விட மணமகள் வயது 3 வருடம் முதல் 5 வருடம் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. இப்படி திருமணத்தை செய்துகொள்ளலாமா? அதனால் ஏதும் குறை இருக்கிறதா?
சில ஜாதகங்களில் இதுபோன்று நாங்களே சொல்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கூட பெற்றோர்கள் பையனுடன் வந்திருந்தார்கள். அவருடைய ஜாதகத்தில் 7வது வீட்டில் சனி, 8வது வீட்டில் இராகு என்றிருந்தது. கிட்டத்தட்ட அந்தப் பையனுக்கு 33 வயது ஆகிறது. இதுபோல 7இல் சனி இருந்தால் தன்னை விட வதியல் ஒரு வருடமோ, இரண்டு வருடமோ மூப்பான பெண்ணாகத்தான் அமையும் என்று சொன்னேன். அதற்கு பையனுடைய பெற்றோர்கள், அதெல்லாம் எப்படி என்று கேட்டனர்.


இதற்கு நானும் ஒத்துக்கொள்ளமாட்டேன், எனது மாமியாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பையனுடைய ஜாதகம் அப்படி.இந்தத் தம்பிக்கு 24, 25 வயது இருக்கும் போது ஒரு காதல் வந்திருக்கிறது. அந்தப் பெண் இவரை விட ஒரு வயது அதிகமானவர். அதையே காரணம் காட்டி இவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்த வயதில் காதல் முடிந்து தற்பொழுது 33 வயதாகிறது. அந்தப் பையனும் என்னிடத்தில் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டார்.பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. பொதுவாக ஆணை விட பெண் 3 முதல் 5 வரை குறைவாக இருப்பது நல்லது. தற்பொழுது கலி என்பதால் பெண்ணை விட ஆண் இரண்டு வயது குறைவாக இருந்தாலும் நல்லதுதான். எதற்காக என்றால், ஒருத்தர் நோயாலோ, வயோதிகத்தாலோ சங்கடங்கள் அனுபவிக்க நேர்ந்தால் இன்னொருத்தர் அதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்கள் இதுபோன்று இடைவெளி வைத்து திருமணம் செய்தார்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு குறைந்தபட்சம் 5 அல்லது 6 வயது குறைவான பெண்ணையே திருமணம் முடிப்பார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் 12 வயது 13 வயது வித்தியாசமெல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலைமை அப்படி கிடையாது. பெண், ஒத்த வயதுடைய ஆணையோ அல்லது ஓரிரண்டு வருடம் குறைவான வயதுடைய ஆணை முணம் முடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக இந்த வயது வித்தியாசம் என்பதே ஒருத்தர் சங்கடப்படும் போது மற்றொருவர் இளமையுடன் இருந்து செயல்படுவதற்காகத்தான் செய்யப்பட்டது.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *