Latest News
Home / ஆலையடிவேம்பு / ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது

ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது

வி.சுகிர்தகுமார்

ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது.

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் ( (Srilanka Karate do Federation) இணையவழி மூலம் நடாத்தப்பட்ட தேசிய மட்ட E – KATA சுற்றுப்போட்டியில் ( (E-Kata National Championship) ராம் கராத்தே தோ சங்க (Ram Karate do Organization ) மாணவர்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய ரீதியிலும் அதிகூடிய பதக்கங்களை பெற்ற சங்கம் எனும் சாதனையை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் பி.சரோன் சச்சின்- தங்கப்பதக்கம் பெற்றதுடன் எஸ்.எ.சாராஜ் முகம்மட் வெண்கலப் பதக்கமும் எஸ். ரிசோபன் வெண்கல பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் 16-17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் ஏ.தனரிக்கா வெள்ளி பதக்கமும் 16-17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில், பி.மதன்ராஜ் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டிகான பயிற்சியை சுமுழு சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான். கே.கேந்திரமூர்த்தியின் நெறிப்படுத்தலின் கீழ் விசேட தொடர்பயிற்சிகளை சங்கத்தின் பயிற்றுவிப்பாளர்களான சென்சி. மு.ராஜேந்திர பிரசாத் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சென்சி மு.சாரங்கன் விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கினார்கள்.

சங்கத்தின் மட்டுநகர் சிரேஷ்ட போதனாசிரியர் சென்சி ரி.வேள் கல்முனைக்கான சிரேஷ்ட போதனாசிரியர் சென்சி எம்.முரளீஸ்வரன் சங்கத்தின் இலங்கைக்கான செயளாளர் சென்சி எம்.பி.செயினுல் ஆப்தீன் உள்ளிட்டவர்களும் இப்போட்டிக்கான ஒத்துழைப்பையும், ஆலோசனையினையும்; வழங்கியிருந்தனர்.

இப்போட்டியில் ராம் கராத்தே தோ சங்கத்தின் சார்பில் ஜந்து போட்டியாளர்கள் பங்குபற்றி அனைவரும் வெற்றிபெற்று பதக்கங்களை வென்றெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *