Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
மகாசிவராத்திரியை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் -03 அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் – Website of Alayadivembu
Latest News
Home / ஆலையடிவேம்பு / மகாசிவராத்திரியை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் -03 அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் -03 அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

(வி.சுகிர்தகுமார்)

மகாசிவராத்திரியை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் -03 அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நேற்று மாலை முதலாம் சாம பூஜையுடன் ஆரம்பமாகி இன்று காலை வரை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் நிருவாக சபை மற்றும் அண்ணா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகள் மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

 

ஆலயத்தில் ஆலய குரு சிவஸ்ரீ தவேந்திரசர்மாவினால் பூஜை வழிபாட்டுக்கிரியைகள் நாடத்தி வைக்கப்பட்டன.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனதும் விநாயகப்பெருமானதும் திருவருளை பெற்றனர்.

இதேநேரம் பக்தர்களின் கண்விழிப்பிற்காக சிவசக்தி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வழிகாட்டலில் ஆலய முன்றலில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளில் அதிகளவான மாணவர்கள் பங்கேற்று தமது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் இரண்டே வயது நிறைந்த மழழை தாமகாவே முன்வந்து மேடையில் வழங்கி தேவார பாராயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அனைவரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

நிறைவினில் கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கடந்த மூன்று வருடங்களில் இந்து சமயப்பரீட்சைகளில் தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *