Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் திருக்கோவில் வலயக்கல்வி பகுதிற்கு உற்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைப்பு…. – Website of Alayadivembu
Latest News
Home / ஆலையடிவேம்பு / பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் திருக்கோவில் வலயக்கல்வி பகுதிற்கு உற்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைப்பு….

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் திருக்கோவில் வலயக்கல்வி பகுதிற்கு உற்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைப்பு….

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும், இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 38 பாடசாலைகளைச் சேர்ந்த 985 மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இவ்வாண்டு பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நுவரெலியா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 126 பாடசாலைகளைச் சேர்ந்த 3329 மாணவர்களுக்கும், முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 53 பாடசாலைகளைச் சேர்ந்த 1393 மாணவர்களுக்கும், பதுளை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 43 பாடசாலைகளைச் சேர்ந்த 1048 மாணவர்களுக்கும் , மொத்தமாக 260 பாடசாலைகளைச சேர்ந்த 6755 பாடசாலை மாணவர்களுக்கு விசேட செயலமர்வு நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் தரம் – 5ம் புலமை பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரன தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சையை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *