Latest News
Home / விளையாட்டு / நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி

நான்காவது போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மற்றும் ஜெய் ரிசர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை விக்கெட்களை வீழ்த்தினர்.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வெல் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

ஜோஸ் இஞ்செல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்,.

பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் ​​
தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *