Latest News
Home / ஆலையடிவேம்பு / தமிழர் விடுதலை கூட்டணியினரை சந்தித்தனர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர்கள்!

தமிழர் விடுதலை கூட்டணியினரை சந்தித்தனர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர்கள்!

எமது நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அரசியல் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளுமை மிக்கவர்களாகவும் எதிர்காலத்தில் பிரதேச சபையினை திறன்பட கொண்டு நடத்த கூடிய வேட்பாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர் குழாம் அரசியல் கட்சிகளின் பிரதானிகளை கட்சி பேதம் இன்றி சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் புதன்கிழமை (18/01/2023) தமிழர் விடுதலை கூட்டணி பிரதானிகளை ஆலையடிவேம்பு பகுதியின் சந்தித்த அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பற்றாளர்கள் குழாம் ஆளுமை, அறிவு, மக்கள் சேவை போன்ற வற்றை கொண்ட நபர்களை வேட்பாளர்களாக பட்டியலிடும் கட்சிகளை தாம் வரவேற்பதாக தெரிவித்த பற்றாளர் குழாம் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர்கள் தொடர்பில் கேட்டு அறிந்துகொண்டதுடன்.

தெரிவு செய்யும் வேட்பாளர்கள் சிறந்த அனுபவம் மிக்கவர்களாகவும் மக்களுக்கான நிலைப்பாட்டில் உறுதியாக இறுதிவரை நின்று உழழைக்க கூடிய ஆளுமையானவர்களாகவும் தெரிவு செய்ய வேண்டும் என தமது நிலைப்பாட்டை விளக்கினர்.

இதன் போது கருத்து தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் பிரதான அருள்தம்பிமுத்து பற்றாளர் குழாம் போன்ற அமைப்பானது பிரதேசம் தழுவிய ரீதியில் நிச்சயமாக காணப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்ததுடன் இதன் நடவடிக்கை எதிர்காலத்தில் பிரதேச நலனில் தாக்கம் செலுத்த வேண்டியவாறு அமைய வேண்டும் என தெரிவித்தார்.

எதிர் பார்க்கப்படுகின்ற 2023 உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆலையடிவேம்பு பகுதியில் தமிழர் விடுலை கூட்டணி களமிறங்கவுள்ளதுடன் ஆலையடிவேம்பின் வளர்ச்சிக்காக எமது கட்சி பல முன்னெடுப்புக்களை எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் வேட்பு மனு கால எல்லை மிக குறைவானதாக உள்ளதால் பற்றாளர்களின் வேட்பாளர் தொடர்பான தெரிவு குறித்த நிலைப்பாட்டை தாம் உணர்ந்து கொண்டதாகவும் இது குறித்த சிந்திக்க காலம் போதாமையாக இருந்தாலும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *