Latest News
Home / வாழ்வியல் / கோடைக்கால உஷ்ணத்தால் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின்

கோடைக்கால உஷ்ணத்தால் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பாதாம் பிசின்

“பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதியுறுகின்றனர். அதிலும் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.

அதிக வெப்பம் மிகுந்த கோடைக்காலங்களில், கோடைகாலம் முடிந்து பருவ மழை தொடங்கும் மாதங்கள் போன்ற பருவ மாற்றக்காலங்களிலும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர் பேதி சிலருக்கும் உண்டாகிறது. இந்த சமயத்தில் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினை சிறிதளவு உட்கொண்டு வருவதால் தொடர்ந்து ஏற்படும் பேதி நிற்கும்.

சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும், இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

கோடைகாலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள்(பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *