Deprecated: Optional parameter $depth declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326

Deprecated: Optional parameter $args declared before required parameter $output is implicitly treated as a required parameter in /home/uthirvuk/public_html/alayadivembuweb.lk/wp-content/themes/sahifa/framework/functions/mega-menus.php on line 326
கொரோனா வைரஸால் கணனிகளுக்கும் ஆபத்தா? – Website of Alayadivembu
Latest News
Home / தொழில்நுட்பம் / கொரோனா வைரஸால் கணனிகளுக்கும் ஆபத்தா?

கொரோனா வைரஸால் கணனிகளுக்கும் ஆபத்தா?

மனித உயிர்களை பறித்த கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கணனிகளையும் தாக்கும் என்று பொறியியலாளர்கள் புதிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கஸ்பெர்ஸ்கை கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பொறியியலாளர்கள், கணனிகளில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர்.

இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் டொக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து பொறியியலாளர்கள் கூறியதாவது,

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கணினிகளையும் தாக்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வைரஸ் ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம். கொரோனா வைரஸ் போலியான டொக்மென்ட்டுகள் மூலம் மறைந்து பரவும் என்றனர்.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *