Latest News
Home / உலகம் / கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்கா ஜனாதிபதி வெளியிட்டார்!

கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்கா ஜனாதிபதி வெளியிட்டார்!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.


இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 18ம் திகதி அடுத்தடுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில், ‘அமெரிக்கர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்புக்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன்.

இந்த சீன வைரஸ் (கொரோனா வைரஸ்) தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் ( HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN ) ஆகிய இரு மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் வைத்தியத்துறை வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டிரம்ப், இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவையும் பாராட்டியுள்ளார்.

மேலும், மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மருந்தை உடனடியாக பயன்படுத்துங்கள்! விரைவாக செயல்படுங்கள்! இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும் எனவும் தனது அடுத்த டுவிட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *