Latest News
Home / உலகம் / ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி…?

ஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி…?

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்­தாதி காய­ம­டைந்­துள்­ளதால் அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை அப்­துல்லா குர்தாஸ் என்­ப­வ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தாக சர்­வ­தேச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவர் முன்னாள் ஈராக் ஜனா­தி­பதி சதாம் ஹூசைனின் இரா­ணு­வத்தை சேர்ந்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மறை­மு­க­மாக இருந்து ஐ.எஸ் அமைப்­பினை மீண்டும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள பக்­தாதி  அவ் அமைப்பை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை அப்­துல்லா குர்­தா­ஸிடம் ஒப்­ப­டைத்­துள்ளார் என ஐ.எஸ் அமைப்பின் ஊட­க­மான அமாக் தெரி­வித்­துள்­ளது.

இவர் தனது அதி­கா­ரங்­களை வேறு ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளமை 2017 இல் இடம்­பெற்ற தாக்­கு­தலில் காய­ம­டைந்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கங்­களை அதி­க­ரித்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

சதாம் ஹுசைனின் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய அப்­துல்லா குர்தாஸ் 2003 இல் பஸ்­ராவில் அல்­பக்­தா­தி­யுடன் அமெ­ரிக்க படை­யி­னரால் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­ வேளை அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வ­ராக மாறினார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பேரா­சி­ரியர் என அழைக்­கப்­படும் அப்­துல்லா குர்தாஸ் ஐ.எஸ் அமைப்பின் ஈவி­ரக்­க­மற்ற கொள்கை வகுப்­பாளர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், அமைப்பின் பல­வீ­னங்­களை கண்­ட­றி­வ­தற்­கா­கவும் எதிர்­கா­லத்தில் அவரை தலை­வ­ராக நியமிப்பதை நோக்கமாகக் கொண்டும் அல்பக்தாதி, அப்துல்லா குர்தாஸிற்கு     இந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *