Latest News
Home / உலகம் / இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி!!

இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய பதவி!!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் – மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்டவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 22 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு அமெரிக்காவின் பன்முகத்தன்மையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் சிறந்த குடிமக்களால் ஆனது, அதே நேரத்தில் பரந்த அளவிலான பின்னணிகள், அனுபவங்கள் மற்றும் தொழில்களைக் குறிக்கிறது.

அந்த வகையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *