Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியாவசியப் மரக்கறி பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய விற்பனை நிர்ணய விலைப்பட்டியல் அறிமுகம்! மீறினால் முறையிடுங்கள் பிரதேச செயலகத்தினர்…..

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியாவசியப் மரக்கறி பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய விற்பனை நிர்ணய விலைப்பட்டியல் அறிமுகம்! மீறினால் முறையிடுங்கள் பிரதேச செயலகத்தினர்…..

 

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் COVID-19 தொற்றுப் பரவல் அபாயம் காரணமாகத் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பொதுமக்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில்.

குறித்த வியாபாரிகளால் கூடுதல் விலைகளுக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக நாளாந்தம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து,ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினரினால் குறித்த வியாபாரிகள் தமது விற்பனைக்கான மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வர்த்தகர்களிடம் பெறப்பட்ட விலை விபரங்களை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசியப் மரக்கறி பொருட்களை விற்பனை செய்யக்கூடிய ஆகக்கூடிய விற்பனை நிர்ணய விலைபட்டியலை தயாரித்து மக்களுக்கு அறியத்தந்துள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்தைக் கவனத்தில்கொண்டு , இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆகக்கூடிய விற்பனை விலைகளுக்கு அதிகமாகக் குறிப்பிட்ட மரக்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் தங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் முறைப்பாடுகளைத் தெரியப்படுத்துமாறும் அல்லது 067 2277436 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குத் தெரிவிக்குமாறும் ஆலையடிவேம்பு பிரதேச செயகத்தினரினால் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *