Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம்: கொடையாளர்களுக்கு அழைப்பு….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதற்காக கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம் முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்  077 013 1047 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பவற்றினை அனுப்பி வைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இரத்த தானம் தொடர்பான திகதி, இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.

இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள்.

1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

2. இலவசமாக குருதிப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்நிலைமைகள் அறியத்தரப்படுவதனால் பல நோய்களை முன்கூட்டியே தடுக்கலாம்.

3. உடலின் மேலதிக கலோரிகள் குறைவடையும்.

4. இதயம் மற்றும் ஏனைய அங்கங்களின் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

5. மன அழுத்தம் குறைவடையும்.

6. நீங்கள் வழங்கும் இரத்தம் ஓர் நாள் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ பயன்படலாம்.

அத்தோடு உங்களால் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

இரத்ததானம் செய்வதற்கான தகைமைகள்

1. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
2. உடல் எடை 50kg ற்கு மேற்பட்டவர்கள்.
3. இறுதியாக இரத்ததானம் செய்து 4 மாதங்கள் கடந்தவர்கள்.
4. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வேறு நோய்கள் கொண்டவர்கள் பங்குபற்ற முடியாது.
5. பாலியல் நோய்கள் கொண்டவராக இல்லாதிருத்தல்.

எனவே மேலுள்ள தகைமைகளைக் கொண்டோர் இரத்த தானம் செய்து பல உயிர்களை காப்பாற்ற விரும்புபவர்கள் 077 013 1047 எனும் தொலைபேசிஇலக்கங்களுக்கு sms,whatsapp மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

One comment

  1. 👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *