Latest News
Home / விளையாட்டு / அவுஸ்ரேலியா சென்ற நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்ரேலியா சென்ற நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்ரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காக அவுஸ்ரேலியா சென்றது.

இரு அணிகள் இடையேயான தொடரில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் போட்டி ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஸ் உத்தரவின்படி 15 வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது நியூசிலாந்து வீரர் பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவரை கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதேவேளை, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்த தென்னாபிரிக்க வீரர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *