Latest News
Home / தொழில்நுட்பம் / கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

பொதுவாக கூகுள் மேப்பில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்று கூகுள் மேப் செயலி தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும்.

தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியை காண்பிக்க கூகுள் மேப் செயலியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழியாக பெரும்பாலான வாகனங்கள் பயணித்தால் பல இடங்களில் அதிக புகை வெளியீட்டை தவிர்க்கலாம். குறிப்பிட்ட ஓரிடத்தில் அதிக வாகனங்கள் தேங்குவதால் கார்பன் அளவு அதிகமாகிறது.

இதனை தவிர்ப்பதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் இவ் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் கூறியுள்ளது.

கூகுளின் பருவநிலையை காக்கும் இந்த முன்னெடுப்பு வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *