Latest News
Home / வாழ்வியல் / கடல் மீன் நல்லதா? குளத்து மீன் நல்லதா? காரணம் தெரிந்தால் அந்தப்பக்கமே போக மாட்டீர்கள்!

கடல் மீன் நல்லதா? குளத்து மீன் நல்லதா? காரணம் தெரிந்தால் அந்தப்பக்கமே போக மாட்டீர்கள்!

முன்பெல்லாம் மீன் விற்பனை நிலையம் என்ற விளம்பர போர்டுகளையே அதிகம் பார்த்திருக்கிறேன். இப்போது திரும்பிய இடம் எல்லாம் கடல் மீன் விற்பனை நிலையம், கடல் மீன் உணவகம் என்று இருக்கும் விளம்பர போர்டுகளை அதிகம் காண முடிகிறது. ஒருவேளை நம் மக்கள் கடல் மீன்களைத்தான் விரும்பி உண்கின்றனரா? இல்லை இதில் ஏதாவது வியாபார தந்திரம் இருக்குமா? என்ற சந்தேகம் வந்தது. கடல் மீனுக்கும், நம்ம ஊரில் வாங்கும் குளத்து மீனுக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கப்போகிறது.

சரி என்ன தான் அப்படி இருக்கு என்று மீன் விற்பனை செய்யும் நண்பரிடம் கேட்டால், பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. சத்து எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் என்கிறார். ஆனால் குளம் என்று சொல்லி, பண்ணையில் வளர்க்கப்படும் மீனை, மக்கள் பெரிதாக விரும்புவதில்லையாம்.  பண்ணையில் வளர்க்கப்படும் மீன் சாப்பிடுவதற்கு சக்கை போன்று இருக்கும். கடல் மீனை விட ருசி குறைவாக இருக்கும். அதனால் தான் யாரும் பெரிதாக விரும்புவதில்லை. காசு கொஞ்சம் ஜாஸ்தி கொடுத்தாலும் பரவாயில்லை என்று, ஆத்து மீனோ, குளத்து மீனோ வாங்கிக்கொள்கின்றனர்.

கடல் மீனில் முள் கொஞ்சம் பெரிதாக இருக்குமாம். சாப்பிடும் போது எளிதாக, அதனை மட்டும் தனியாக எடுத்துவிட்டு சாப்பிடலாம். குளத்து மீனில் முள் சிறியதாக இருப்பதால், பார்த்து பார்த்து நிதானமாக சாப்பிட வேண்டும். உப்பு நீரில் வளர்வதால், கடல் மீனின் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதே போல கால்சியமும் அதிகமாக இருக்கும். கடல் மீன்கள், சிப்பி, இறால், கடல் பாசிகள் போன்றவற்றை உண்டு வாழ்வதால், இதயம் மற்றும் மூளைக்கு நன்மை தரும் ஒமேகா 3s அதிகமாக உள்ளது.

கடல்மீனிலும் சரி, குளத்து மீனிலும் சரி உடலுக்கு தேவையான அடிப்படை சத்துகள் நிறைந்தே உள்ளது. மற்ற இறைச்சி சாப்பிடுவதை விடவும் மீன் உடலுக்கு ஆரோக்கியமானது. நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து எந்த மீன் சாப்பிட வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். தமிழகத்தின் உள்மாவட்டமாக இருந்தால், பதப்படுத்திய கடல் மீன்களே கிடைக்கும். கடற்கரையை ஒட்டிய மக்களுக்கு பிரெஷ்ஷான மீன் கிடைக்கும். ஆத்து மீனோ, குளத்து மீனோ அல்லது கடல் மீனோ எதுவாக இருந்தாலும், இரசாயன பதப்படுத்துதல் இன்றி சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *