Latest News
Home / வாழ்வியல் / இளம்வயதிலேயே நரைமுடியா? எப்படி தடுக்கலாம்?

இளம்வயதிலேயே நரைமுடியா? எப்படி தடுக்கலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

இதனை தடுக்க பலர் ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது.

இதனை இயற்கைமுறையில் கூட எளியமுறையில் நீக்க முடியும். தற்போது அதனை பார்ப்போம்.

தேவை
  • காபி கொட்டை – 20 கிராம்
  • மருதாணி – சிறு கைப்பிடி அளவு
  • நெல்லி பொடி அல்லது நறுக்கிய நெல்லித்துண்டுகள் – 2 டீஸ்பூன்
செய்முறை

காபிகொட்டை, நெல்லிக்காய் ( பொடியில்லாமல் இருந்தால்) மருதாணி மூன்றையும் உரலில் இடித்து பிறகு அம்மி அல்லது மிக்ஸியில் வைத்து மைய அரைக்கவும்.

இதை கட்டியில்லாமல் நன்றாக பேஸ்ட் போல் அரைக்கவும். ஹேர்டை அதிலும் இயற்கையான ஹேர்டை பயன்படுத்தும் போது கூந்தலை அழுக்கில்லாமல் சிக்கில்லாமல் வைத்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த டை எளிதாக கூந்தலின் மீது பிடிக்கும். கூந்தலை சிக்கில்லாமல் சீவி பகுதி பகுதியாக பிரித்து கூந்தலின் ஸ்கால்ப் முதல் தடவவும்.

இளநரை இருக்கும் பகுதிகளில் மட்டுமல்லாமல் கூந்தல் முழுமைக்கும் தடவலாம். அதே நேரம் இளநரை இருக்கும் இடங்களில் கூடுதலாக தடவவேண்டும். 1

மணி நேரம் கூந்தலை காயவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசி எடுக்கவும். முதல் முறை மட்டுமே பலன் அளிக்காது. வாரம் இருமுறைசெய்ய வேண்டும்.

மருதாணிசேர்ப்பது மட்டும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைசேர்க்கலாம். அல்லதுஅளவை குறைத்து பயன்படுத்தலாம்

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *