Latest News
Home / தொழில்நுட்பம் / DEWN முன் எச்சரிக்கை App உடன் இணைந்து மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருங்கள்

DEWN முன் எச்சரிக்கை App உடன் இணைந்து மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருங்கள்

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, பல ஆண்டுகளாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் மதிப்புமிக்க பங்காளிகளுடன் மோசமான வானிலை தாக்கத்தை குறைப்பதற்காக செயற்பட்டு வருகின்றது.

பேரழிவு அவசர எச்சரிக்கை வலையமைப்பு (DEWN) மொபைல் App, மோசமான வானிலைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும் அவர்கள் எச்சரிக்கைகளுடன் தயாராக இருப்பதற் கான அறிவினையும் அதற்கான கருவிகளையும் வழங்குகின்றது.

டயலொக், மைக்ரோஇமேஜ் மொபைல் மீடியா (பிரைவட்) லிமிட்டட் மற்றும் மொரட்டுவை மொபைல் கமியூனிகேஷன் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் என்பவற்றுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) க்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட DEWN, புதிய தொழில்நுட்பத்தை மொபைல் வலையமைப்பின் ஊடாக பயன்படுத்தி பொது மக்களுக்கும் முதல் பதிலளிப்பாளர்களுக்கும், வரவிருக்கும் இயற்கை பேரழிவுகள் சம்பந்தமாக தனிப்பயனாக்கப்பட்ட எச்சரிக்கை தகவல்களை வழங்குகின்றது. னுநுறுN அமைப்பானது முதல் பதிலளிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் எச்சரிக்கை தகவல்களை அனுப்பவதற்கு உரிய வசதியினை வழங்குவதுடன் அனர்த்த முகாமைத்துவ மையமானது பல்வேறு பங்குதாரர் குழுக்களுக்கான ஆபத்துக்களை தடுக்கும் விதமாக செயற்படுகின்றது.

மேலும் DEWN அமைப்பானது தேசிய மற்றும் பிராந்திய எச்சரிக்கை தகவல்களை Cell Broadcast தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குவதற்கான ஆளுமையினை கொண்டுள்ளது. Cell Broadcast தொழில்நுட்பமானது எந்தவொரு சாதாரண கையடக்க தொலைபேசியிலும் காணப்படும் ஒரு அம்சமாகும். ஸ்மார்ட்ஃபோன்களுக்கான DEW ஆனது அதே அம்சங்களை கொண்டுள்ளதுடன் பாவனையாளர்களை ஆபத்தின் போது, அண்மித்த வெளியேற்றல் இடத்தினை நோக்கி அனுப்புவதற்கான பட வரைபினையும் வழங்குகின்றது (Map).

Google Play Store மற்றும் Apple App Store க்கு சென்று DEWN App இனை இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும்.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *