Latest News
Home / விளையாட்டு (page 26)

விளையாட்டு

IPL இறுதிச் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணிகள்!

ஐபிஎல் 2020 போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை – டெல்லி அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் போட்டியின் 2 ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ், முதல் முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் …

மேலும் வாசிக்க

இறுதி போட்டிக்கு நுழையும் இரண்டாவது அணி எது ? டெல்லி- சன்ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை

2020 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு நுழையும் இரண்டாவது குவாலிபையர் சுற்று போட்டி இன்று நடைபெறவுள்ளது. அபுதாவியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று இடம்பெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் குறித்த இரு அணிகளில் ஒன்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இன்று முக்கிய …

மேலும் வாசிக்க

எட்டு வருடங்களாக என்ன செய்தார்? விராட் கோஹ்லி விலக வேண்டும் என்கிறார் கம்பீர்!

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று அணித்தலைவர் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலக வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். கிரிக்கெட் இணையதளமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பெங்களூர் அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோஹ்லி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தை அவரால் பெற்றுத் தர …

மேலும் வாசிக்க

IPL இல் அதிக சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்!

ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் மும்பை வீரர் இஷான் கிஷன் முதலிடம் பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. டுபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் …

மேலும் வாசிக்க

2014 முதல் 500 ஓட்டங்களுக்குக் குறையாமல் எடுக்கும் வீரர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு 12.50 கோடி ரூபா சம்பளம் வழங்குகிறது. அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் பின்னால் தான் உள்ளார். விராட் கோலி, பேட் கம்மின்ஸ், தோனி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் என 15 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் வேறு யாரை விடவும் அதிகப் பங்களிப்பு செலுத்தி, தனது அணிக்குப் பெரிய …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். 2020: இறுதி லீக் போட்டியில் சன்றைசர்ஸ் அபார வெற்றி!

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 56ஆவதும் இறுதியுமான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டி, சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றதுடன் இதில் 10 விக்கெட்டுகளால் சன்றைசர்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப்போட்டியில், சன்றைசர்ஸ் அணி நாணாயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் எட்டு …

மேலும் வாசிக்க

4 தோல்விகள் அடைந்தும் பிளேஆஃப்புக்குத் தகுதி!

கடைசி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. 2016 இல் லீக் சுற்றின் முடிவில் 2 ஆம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2018 இல் 6 ஆம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த 3 வருடங்களாக …

மேலும் வாசிக்க

வெற்றியுடன் வெளியேறியது சென்னை!

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் சென்னை சூப்பா் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது. மும்முறை சாம்பியனான சென்னை ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃபுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது இது முதல்முறையாகும். மறுபுறம், சென்னையிடம் தோல்வி கண்ட பஞ்சாபும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்கான போட்டியில் இருந்திருக்க இயலும். அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறிய கிறிஸ் கெய்லுக்கு அபராதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக கிறிஸ் கெய்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைவதற்கு முன்பு, 99 ஓட்டகள் எடுத்த கெய்ல், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்த பின்னர் சதத்தை தவறவிட்ட விரக்த்தியில் தனது துடுப்பாட்ட மட்டையை வீசினார். இது ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறும் சம்வமாகும். இதனை அவர் …

மேலும் வாசிக்க

லங்கன் பிரீமியர் லீக் 2020: தீம் பாடல் மும்மொழிகளில் வெளியானது!

சிறிலங்கா கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் லங்கன் பிரீமியர் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தீம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்.பி.எல். தீம் பாடல் மற்றும் இசையை இலங்கையின் பிரபல பாடகர்களான பாத்தியா மற்றும் சந்தூஸ் ஆகியோர் சரிகம இசைக் குழுவுடன் இணைந்து தயாரித்து பாடியுள்ளனர். இப்பாடலின் தமிழ் …

மேலும் வாசிக்க