Latest News
Home / விளையாட்டு

விளையாட்டு

15ஆவது U19 உலகக்கிண்ணம்: நமிபியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

பத்தொன்பது வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், இலங்கை அணியும் நமிபியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குழு ‘சி’இல் இரு அணிகள் மோதும் இப்போட்டி, கிம்பர்லே- டயமண்ட் ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி மோதிய முதல் போட்டியில், சிம்பாப்வே அணியை டக்வத் லுயிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது, தனது இரண்டாவது லீக் போட்டியில் …

மேலும் வாசிக்க

சாதனை படைத்த சமரி அத்தபத்து!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின்  தலைவர் சமரி அத்தபத்து 2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேவேளை இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் சமரி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எவ்வாறு இருப்பினும் சமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை …

மேலும் வாசிக்க

இலங்கைக் கிரிக்கெட் சபையில் ‘சனத் ஜயசூரியவுக்கு‘ முக்கிய பதவி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்ரேலியாவிற்கு 4 மில்லியன் டொலர்களும் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லீக் போட்டியில் வெளியேற்றப்பட்ட அணிகளுக்கும் வெற்றிக்கு ஏற்ற தொகைக்கு மேலதிகமாக ஒருஇலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா (4.28 மில்லியன்) …

மேலும் வாசிக்க

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார். அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் …

மேலும் வாசிக்க

சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தை நாட தயார்

கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும், நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்காலக் குழுவிற்கு …

மேலும் வாசிக்க

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது 49.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி இலங்கை அணிக்கு வெற்றி 263 ஒட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, அறிவிக்கப்பட்ட இலங்கை அணி இன்று இந்தியா பயணிக்கவுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு  கீழே.

மேலும் வாசிக்க

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது. தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை …

மேலும் வாசிக்க

ஆசிய கிண்ண தொடர் : இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட முடியவில்லை. இதனால் பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் …

மேலும் வாசிக்க