Latest News
Home / விளையாட்டு (page 4)

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 14 புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ​நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton Roux நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை A அணி, வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை A அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் பின்வருமாறு, திலின கண்டம்பி – …

மேலும் வாசிக்க

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நிராகரித்த மஹேல!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளார். …

மேலும் வாசிக்க

துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீத் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

IPL இல் விளையாடும் இலங்கை வீரர்கள் நாடு திரும்பி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், நாட்டுக்கு வந்து தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கோரியுள்ளார். ஐ.பி.எல் இல் விளையாடும் சில வீரர்கள், தங்களின் நாட்டைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது தமக்கு தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த …

மேலும் வாசிக்க

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்!

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க

இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக …

மேலும் வாசிக்க

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷேன் வோர்ன் உயிரிழந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

இந்தியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதோ!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, திமுத் கருணாரத்ன (தலைவர்) தனஞ்சய டி சில்வா பெதும் நிஸ்ஸங்க லஹிரு திரிமான்ன குசல் மெண்டிஸ் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தினேஷ் சந்திமால் சரித் அசலங்க நிரோஷன் டிக்வெல்ல சாமிக கருணாரத்ன லஹிரு குமார சுரங்க லக்மால் துஷ்மந்த சமீர விஷ்வ …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்ப்பில் இஷான் கிஷான் 89 ஓட்டங்களையும் ஷ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் …

மேலும் வாசிக்க

இறுதி ஓவர் வரை பரபரப்பு : வைட் வோஷில் இருந்து தப்பியது இலங்கை அணி

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. மெல்போனில் இடம்பெற்ற இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து வைட் வோஷில் இருந்து இலங்கை அணி தப்பியுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் மத்தியூ வேட் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை …

மேலும் வாசிக்க