Latest News
Home / விளையாட்டு (page 25)

விளையாட்டு

ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அபராதம்!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், விளையாடிய இந்தியக் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை, அபராதம் விதித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்கள், 50 ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் …

மேலும் வாசிக்க

தசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருது: பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள்!

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கிரிக்கெட் தசாப்தத்தினைக் குறிக்கும் வகையில் பல்வேறு விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நான்கு இலங்கை வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதன்படி, தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஆண் வீரர்கள்: விராட் கோலி (இந்தியா) ஜோ ரூட் (இங்கிலாந்து) கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) ரவிச்சரந்திரன் அஸ்வின் (இந்தியா) குமார் சங்கக்கார …

மேலும் வாசிக்க

எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!

லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாளைய தினம் எல்.பி.எல் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பாக உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்த உள்ளன. இதில் ஜப்னா …

மேலும் வாசிக்க

IPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்!

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூலமாக பிசிசிஐக்கு 4000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2021 ஐபிஎல் …

மேலும் வாசிக்க

லங்கன் பிரீமியர் லீக்: கண்டி டஸ்கர்ஸ் அணியில் கெய்லுக்கு பதிலாக டெய்லர்!

இலங்கையில் முதல்முறையாக நடைபெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்கு பிரெண்டன் டெய்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் விளையாடுவதாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், இத்தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 25ஆம் திகதி டெய்லர் இலங்கைக்கு வருவார் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலம் காரணமாக அவர் …

மேலும் வாசிக்க

15 வயதை பூர்த்தி செய்யாதவர்கள் இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பு அமல்படுத்தியுள்ளது சமீபத்தில் இடம்பெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆடவர் / மகளிர் ஐசிசி போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், யு-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என …

மேலும் வாசிக்க

தேர்தலுக்கு எதிராக மேலும் பல வழக்குகள்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சதவீத அடிப்படையில் அவுஸ்ரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. ஆனால் …

மேலும் வாசிக்க

‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் இம்முறையாவது சம்பியன் பட்டம் வெல்வாரா நடால்?

இதுவரை ‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் சம்பியன் பட்டம் வெல்லாத ஸ்பெயினின் முன்னணி வீரரான ரஃபேல் நடால், இம்முறை சம்பியன் பட்டம் வெல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்பெயினின் ரஃபேல் நடால், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரருடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால், இதுவரை ‘ஏடிபி பைனல்ஸ்’ தொடரில் சம்பியன் பட்டம் வெல்லாத நடால், 2010ஆம், 2013ஆம் …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். தொடரில் ஒரு புதிய அணி- பழைய அணிகள் கலைக்கப்படும்!

எதிர்வரும் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 தொடரில், புதிதாக ஒரு அணி உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐ.பி.எல். அணியை உருவாக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இதன்படி 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது. இதனால் ஜனவரி அல்லது பெப்ரவரியில் ஐ.பி.எல் ஏலத்தை நடத்த …

மேலும் வாசிக்க

20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்

துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் …

மேலும் வாசிக்க