பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சிட்னி நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இதற்கமைய, அவருக்கு வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமது பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனுஷ்க தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிவான் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். டிண்டர் அரட்டை செயலி ஊடாக அறிமுகமான பெண் …
மேலும் வாசிக்கஇலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 87 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்திருந்தார். 374 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய …
மேலும் வாசிக்கசவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணியில் இணைந்தார் ரொனால்டோ!
தலைமுறையின் சிறந்த கால்பந்து நட்சத்திரமாக அறியப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபிய அணியான அல் நாசர் கழக அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய ஊதியமாக வருடத்திற்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பெறுவார் என கூறப்படுகிறது. முன்னதாக மன்செஸ்டர் யுனைடெட் கழக அணிக்கு விளையாடிவந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து …
மேலும் வாசிக்ககுட்டி சங்காவிற்கு விருது!
பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை சாருஜன் சண்முகநாதன் தனதாக்கியுள்ளார். புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரராக சாருஜன் சண்முகநாதன் காணப்படுகின்றார். இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் குட்டி சங்கா எனவும் சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்ககாட்டார் இறுதிப் போட்டியே தனது கடைசி ஆட்டம் – மெஸ்ஸி
2022 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி அர்ஜென்டினாவுக்கான தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடந்த அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வென்றது. இப்போட்டியில் இதுவரை ஐந்து கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, உலகக் கிண்ண போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழ்கின்றார். இந்நிலையில் அந்நாட்டு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மெஸ்ஸி, ” பல …
மேலும் வாசிக்கபரபரப்பான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், …
மேலும் வாசிக்கஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள்: ருத்துராஜ் கெய்க்வாட் சாதனை!
இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அவர் இந்த சாதனையை படைத்தார். அஹமதாபாத் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற உத்தர்பிரதேஸ் அணிக்கெதிரான போட்டியில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் ருத்துராஜ் கெய்க்வாட், சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் ஒரு நோ போல் உள்ளிட்ட ஏழு பந்துகளுக்கும் …
மேலும் வாசிக்கசாமிக்கவுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை!
இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை கருணாரத்ன ஒப்புக்கொண்ட நிலையில் போட்டித் தடைக்கு …
மேலும் வாசிக்கபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட, இரண்டாவது பிணை விண்ணப்பம் கடந்த 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது பிணைக்கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நிவ் சவுத்வேல்ஸ் நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்த போதும், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த …
மேலும் வாசிக்கஇலங்கை மகளிர் கிரிக்கெட்: ஹஷான் திலகரத்ன இராஜினாமா
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஹஷான் திலகரத்ன இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நவம்பர் 1ஆம் திகதி முதல் ஹஷான் திலகரத்ன, பொறுப்பேற்கவுள்ளார்.
மேலும் வாசிக்க