Latest News
Home / thasthi

thasthi

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் 94 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 49 ஆண்களும் 45 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான இருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 821ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 654 …

மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண, போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உடல்நலம் குறித்து அரசாங்கம் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் …

மேலும் வாசிக்க

பாண் ஒன்றை வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதை அடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று (12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதியில் வாகனத்தை மறித்து ஒருவர் பாணினை வாங்கியுள்ளார். வாங்கிய பாணினை உண்பதற்காக எடுத்த …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடும், இரண்டாம் தர இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முன்னணி வீரரான ஷிகர் தவான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால் இத்தொடரில் விளையாடவில்லை. ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில், …

மேலும் வாசிக்க

வடக்கு கடலினுள் பேரூந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க டக்ளஸ் முயற்சி

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும்,  குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு …

மேலும் வாசிக்க

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண்ணொருவர் முதன்முறையாக நியமனம்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு பெண் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மகளீர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரிவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் …

மேலும் வாசிக்க