Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் ஏற்பாட்டில் பெரியபிள்ளையார் ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி …

ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் ஏற்பாட்டில் பெரியபிள்ளையார் ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி …

 

தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக (14.10.2020 – 20.10.2020) காலப்பகுதியானது பிரகடனப்படுத்தப்பட்டு பல டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது அதனை முன்னிட்டு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினர் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு போன்ற சமூக அமைப்புகளுக்கு சிரமதானம் ஒன்றை மேற்கொள்ளுவதற்கான அழைப்பினை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு அக்கரைப்பற்று 7/1 யில் அமைந்துள்ள பெரியபிள்ளையார் ஆலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணியானது ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் S.கோகுலன் மற்றும் E.மோகனதாஸ் அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

இந்த சிரமதான பணியினை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் தலைவர் க.சுந்தலிங்கம், அமைப்பின் ஆலேசாகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து தங்கள் பங்களிப்பினை வழங்கி இருந்தனர்.

மேலும் இந்த சிரமதான பணிக்கு ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு மற்றும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவின் நிர்வாக இயக்குனர் M.கிரிசாந், தலைவர் கபிஷன், செயலாளர் கிஷோர், முன்னணி உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து தங்கள் பங்களிப்பினையும் வழங்கி இருந்தனர்.

குறித்த டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் பெரியபிள்ளையார் ஆலய வளாகத்தில் காணப்பட்ட புற்களை துப்பரவு செய்ததுடன் வீசப்பட்டிருந்த போத்தல்கள் பிளாஸ்டிக் பைகள் சிரட்டைகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை இச்சிரமதானப்பணியில் இணைந்து கொண்டவர்களுக்கு குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் ஆலய நிர்வாகத்தினரினால் வழங்கியதுடன் தங்கள் ஒத்துழைப்பினையும் வழங்கி இருந்தனர்.

இவ் சிரமதான பணியின் நிறைவில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரினாலும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு மேலும் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு அமைப்புக்களுக்கு தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும்  தெரிவித்தம்  இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


 

 

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *