Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி உலர் உணவுப்பொதி…

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி உலர் உணவுப்பொதி…

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதியினை வழங்கி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதியினை சுவாட் நிறுவனமானது இன்று(06) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தது.

சுவாட் நிறுவனத்தின் தலைவர் வடிவேல் பரமசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன், உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன்   ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் எம்.சுதாகரன், ம.உமாதர்சினி உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர்.

நிவாரணம் பெற வருகை தந்த மக்கள் சமூக இடைவெளியை பேணியதுடன் பாதுகாப்பான முறையில் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *