Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அறநெறி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அறநெறி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் இன்று (03/09/2023) ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

குறித்து நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் மேற்பார்வையில் மன்றத்தின் பொருளாளர் திரு.லயன்.J.தர்மதாச அவர்களின் தலமையில் திறன்பட இடம்பெற்றதுடன் இந்து மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

அப்பியாச கொப்பிகள் தெரிவு செய்யப்பட்ட சாராத தேவி அறநெறி பாடசாலை, ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறி பாடசாலை, சிவசக்தி அறநெறி பாடசாலை, கலைமகள் அறநெறி பாடசாலை, விநாயகர் அறநெறி பாடசாலை, பாசுபதேசுவரர் அறநெறி பாடசாலை, கண்ணகி அறநெறி பாடசாலை ஆகிய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *