Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பகுதியில் நீர் வழங்கல் குழாய்கள் தீக்கிரை சம்பவங்கள்! எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்கள் கேள்வி?

அக்கரைப்பற்று ,ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பகுதியில் நீர் வழங்கல் குழாய்கள் தீக்கிரை சம்பவங்கள்! எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மக்கள் கேள்வி?

-ம.கிரிசாந்-

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராமங்களில் இது வரை போதியளவு குடிநீர் வசதியின்றி மக்கள் கஷ்டத்தின் மத்தியில் இன்றும் வாழ்ந்துவருகின்ற நிலையில்.

எமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒன்றாக கருதப்படும் பனங்காட்டு பலத்தை கடந்து குடிநீர் வழங்கும் திட்டம் எமது நாட்டின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போதிலும். தற்பொழுது நீர் குழாய்கள் (PE Pipe) பறிக்கப்பட்டும், ஒரு சில இடங்களில் தாமதமான நிலையில் நீர் இணைப்பிற்கு பதிக்கபடுவதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலையில்,
ஆலையடிவேம்பு பிரதேச, சாகாமம் வீதி மொட்டயாமலையை அண்மித்த பிரதான வீதியில் குடிநீர் இணைப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் இணைப்பு குழாய்கள்(PE pipe) (01.08.2023) தீயில் எரிந்து சேதம்.

ஆலையடிவேம்பு பிரதேச கூழாவடி பகுதியில் நீர் விநியோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட 21 நீர் இணைப்பு குழாய்கள் (PE pipe) (01.09.2023) தீக்கிரை.

என பல இலட்சம் ரூபா பெறுமதிமிக்க நீர் இணைப்பு குழாய்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்ற நிலையில்.

எப்படி தீக்கிரையானது? எதனால் தீக்கிரையானது? என பிரதேச மக்கள் மத்தியில் பாரிய மனக்குழப்பம் எழுந்திருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

இதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றார்கள்.

பொறுப்புவாய்ந்த மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என அனைவருக்கும் குறித்த விடயங்கள் அறிந்திருக்கின்ற நிலையிலும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள் பிரதேச மக்கள்.

குடிநீர் அத்தியாவசி தேவை என்பதை கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான மக்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு விசனத்துடன் கூடியதாக கோரிக்கையினை முன்வைக்கிறார்கள் பிரதேச மக்கள்.

Check Also

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதானம்….

      சிரமதான பணி அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *