Latest News
Home / ஆலையடிவேம்பு (page 32)

ஆலையடிவேம்பு

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் ரூபா இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடம் பழைமையானதாகவும் பாவனைக்கு உகந்த தற்றதாகவும் இருந்த நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சந்திரசேகரம் மற்றும் செயலாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் முயற்சியால் அகில இலங்கை இந்துமாமன்ற அமைப்பினருடன் கலந்துரையாடி ரூபா இரண்டு லட்சம் பணம்  அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்டது. குறித்த பணத்தின் மூலமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஆண்கள் விடுதியின் மலசலகூடத்திற்கான நிலத்திற்குத் தேவையான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மேலதிகமாக அபிவிருத்திக்குழுவின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் 01 இடம், அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….

உதயம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12 அணிகள் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது. குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகத்தை எதிர்த்து தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் துடுப்பெடுத்தாடி தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது 08 கழகங்கள் பங்குபற்றிய தொடரில் 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள். இவ் கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகமானது இறுதி …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு பக்தி பூர்வமாக….

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (17.07.2022) அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கோளாவில் …

மேலும் வாசிக்க

கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு….

ஹரிஷ், யனோஷன் கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அலங்கார உற்சவ பெருவிழாவானது (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (15.07.2022) காலை நிகழ்வாக பாற்குட பவனியானது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்து. மேலும் இன்றைய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு

அக்கரைப்பற்றில் இந்து ஸ்வயம் சேவக சங்க கொடியேற்றம், கொடி பூஜை பிராத்தனை நிகழ்வு என்பன இன்றைய தினம் (13.07.2022) கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் சசிந்திரன் ஜீ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் சிறப்பு அதிதியாக த. கைலாயய்ப்பிள்ளை அவர்கள் கலந்து கொண்டார் மேலும் அம்பாறை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர்களான வரதன் மற்றும் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் பெருவிழாவின் பாற்குட பவனி நிகழ்வு….

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. மகோற்சவப் பெருவிழாவானது (04.07.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் 09ம் நாள் ஆகிய இன்று (12.07.2022) காலை நிகழ்வாக பாற்குட பவனியானது கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேக உட்சவமானது பெரும் திரளான பக்தர்கள் சூழ சிறந்தமுறையில் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் 08ம் நாள் பெருவிழாவின் திருவேட்டை உற்சவம்……

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. மகோற்சவப் பெருவிழாவானது (04.07.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் 08ம் நாள் ஆகிய இன்று (11.07.2022) காலைத்திருவிழா இடம்பெற்று மாலை திருவேட்டை உற்சவமும் உள்வீதி, வெளிவீதி உலா என்பனவும் பக்தர்கள் சூழ சிறந்தமுறையில் இடம்பெற்றது. மேலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய மகோற்சவப் நாளாந்த திருவிழாக்களில் வெளிவீதி உலாவின் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச உதயம் விளையாட்டு கழகத்தின் மரம் நடுகை நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச உதயம் விளையாட்டு கழகத்தின் மரம் நடுகை நிகழ்வு நேற்று (03.07.2022) காலை 10.00 மணியளவில் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் சிறந்த முறையில் இடம்பெற்றது. மேலும் உதயம் விளையாட்டு கழக கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் பயிற்சி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெற்று வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணம் என்பனவும் அதிதிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.பபாகரன், ஆலையடிவேம்பு …

மேலும் வாசிக்க

சர்வதேச யோகா தினத்தினை நினைவு கூறும் முகமாக அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் யோகா நிகழ்வு……

சர்வதேச யோகா தினத்தினை நினைவு கூறும் முகமாக நேற்றய தினம் (26/06/2022) காலை 6.30 மணியளவில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் யோகா நிகழ்வு மா.கிருபைராஜா தலைமையில் இடம்பெற்றது. மேலும் ஆரம்ப நிகழ்வாக கொடியேற்றத்தினை தொடர்ந்து யோகாசன பயிற்றுவிப்பாளர்களான காந்தன் மற்றும் க. வரதன் ஆகியோரினால் பயிற்றுவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமுர்த வசனம், சுபாஷிதம், தனிப்பாடலைத் தொடர்ந்து சிறப்புறை ஆலையடி வேம்பு இந்து ஸ்வயம் சேவக சங்க உறுப்பினர் …

மேலும் வாசிக்க

அருள்மிகு கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு பெருவிழா……

 -காபிஷன்- கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளித்தி சடங்கு சனிக்கிழமை (04.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகியதுடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.06.2022) திருக்குளித்தி நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வுகள் ஆக காலை பொங்கல் நிகழ்வுகளும் மாலை 3.00 மணியளவில் அம்மன் திருக்குளித்தில் பூசைகள் ஆரம்பமாகி மாலை 5.00 மணியளவில் திருக்குளித்தி நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது. இவ் திருச்சடங்கு பூசை நிகழ்வுகள் ஆலய காப்புகானர் …

மேலும் வாசிக்க