Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பில் போதை பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி- ஆர்ப்பாட்டம்!!

ஆலையடிவேம்பில் போதை பொருள் வியாபாரிகளால் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி- ஆர்ப்பாட்டம்!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும்  போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத  செயற்பாடுகளை நிறுத்தகோரி பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (3) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் ஆலையங்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் இதனையடுத்து பிரதேச செயலகத்தின் முன்னாள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள ஒன்றிணைந்தனர்.

இதன் போது அண்மைக்காலமாக போதை பொருள் வியாபாரிகளால் பல கொள்ளைச் சம்பவங்கள் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன்  இப் பிரதேசத்தில் வாழும் நீதிபதி ஒருவரது வீட்டில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம், நீதிமன்ற ஆவணங்களை அழிக்கும் போக்கில் பதிவேட்டறையை தீ வைத்தமை, பிரதேச செயலாளருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல், பாடசாலை ஆசிரியர்கள் மீதான கொலை அச்சுறுத்தல், சூதாட்ட விடுதிகள் அதிகரித்துள்ளது

இவ்வாறான தொடர் சம்பவங்களினால் பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இதனை தடுக்க பொலிசார் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாமை, போன்ற செயற்பாடுகள் காரணமாக பொலிசார் மீது அவநம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன் மறைமுக ஆதரவை பொலிசார் இவர்களுக்கு வழங்குகின்றனரா?

பிரதேசத்தில் சூதாட்ட மையங்கள் இயங்கிவருவது தொடர்பான தகவல்களை மக்களால் வழங்கப்படுகின்றபோதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டவிரோத செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது

பொலிஸ் உயர் அதிகாரிகள் அக்கறை கொண்டு அக்கரைப்பற்று பொலிசாரை இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுடன்  நெருங்கிய தொடர்புடைய உறவை பேணும் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் செய்யவும்  கோரிக்கை விடுப்பதாகவும்

பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் வழங்கும் வியாபாரத்தை நிறுத்து, போதை பொருள் வியாபரிகளால் ஆசிரியர்கள் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தனிநபர் சட்டவிரோத செயற்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஜனாதிபதி; பொலிஸ் மா அதிபர் மற்றும சம்மந்தப்பட்ட் அதிகாரிகளுக்கான மகஜரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் வழங்கிய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *