Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும்….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும்….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் பேராதரவில், ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவை நடாத்திய சிறப்பு பட்டிமன்றமும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (19/11/2022) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் தாராளர் இறைபணிச் செம்மல் த.கயிலாயபிள்ளை J.P (ஸ்தாபகர், தலைவர் இந்து இளைஞர் மன்றம், சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையம், அக்கரைப்பற்று) மற்றும் தலைவர் திரு கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு) இவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றக் கேட்போர்கூட  சுவாமி விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் பயனுள்ளதாக இடம்பெற்றது.

இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவையினால் நடாத்தப்பட்ட பட்டிமன்றம் ”மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது பணமா? பாசமா? எனும் தலைப்பில் ஆக்கபூர்வமாக சமூகத்திற்கு தேவையான முக்கிய படிப்பினைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த முறையில் இடம்பெற்றது.

பட்டிமன்றத்தின் நடுவரக இறைபணிச் செம்மல் திரு. த. கயிலாயபிள்ளை J.P அவர்கள் காணப்பட்டதுடன் பட்டிமன்ற பேச்சாளர்களாக திரு. V. குணாளன் ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர், திரு. S. மணிவண்ணன் அதிபர், திரு.கே.கிஷ்ணமூர்த்தி தலைவர், தமிழ் இலக்கியப் பேரவை ஆலோசகர், திரு. N. செல்வநாதன் ஓய்வு நிலை விரிவுரையாளர், திரு. தா. ஜெயாகர் ஆசிரியர், திரு. L. சஞ்சிகா பேச்சாளர் அவர்களும் வாதப்பிரதிவாதங்களுடன் சிறந்த முறையில் பங்கேற்று இருந்தார்கள்.

மேலும் கௌரவிப்பு நிகழ்வானது திருவாளர் சமூக ஜோதி வே.சந்திரசேகரம் J.P (அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர், முன்னாள் மத்தியஸ்த சபைத் தவிசாளர் முன்னாள் அதிபர், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர்) அவர்கள் மற்றும் சிஹான் கராத்தே ரத்னா K. ஹேந்திரமூர்த்தி (ராம் கராத்தே சங்க இலங்கைக் கிளை போதனாசிரியர், தேசிய நடுவர் அம்பாறை மாவட்டம். கராத்தே சங்க தலைவர், கிழக்கு மாகாண சோட்டோகான் சம்மேளன தலைவர்) அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்.

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண கராட்டிச் சுற்றுப்போட்டியில் பதக்கங்களை பெற்றுக்கொண்ட சாதனை மாணவர்களையும் கௌரவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வும் கோலாகலமாக இடம்பெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக K. கோடீஸ்வரன் (முன்னாள் பா. உறுப்பினர்), Dr. குணபாலன் (பீடாதிபதி முகாமைத்துவப்பீடம் தென் கிழக்கு பல்கலைக்கழகம்), V.பாபகரன் (பிரதேச செயலாளர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்), T. த.கிறோஜாதரன் (தவிசாளர் ஆலையடிவேம்பு பிரதேச சபை) ,செல்வி அனுசியா சேனாதிராசா (சமூகவியல் துறை பேராசிரியர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்),  Dr. K. முருகானந்தன் , (முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்) திரு.இ.ஜெகநாதன் (தலைவர் வர்த்தக சங்கம்) அவர்களும்.

மேலும் திருமதி Dr. சித்திராதேவராஜன் (முன்னாள் வைத்திய அதிகாரி), Dr. குணாளினி சிவராஜ் (வைத்திய அதிகாரி- பனங்காடு வைத்தியசாலை) அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *