Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் இன்று பாற்குடபவனி நிகழ்வு…..

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் இன்று பாற்குடபவனி நிகழ்வு…..

படங்கள்: தீபன்

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.

அந்த வகையில் இன்று (30.09.2022) வெள்ளிக்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான பாற்குடபவனி நிகழ்வு ஸ்ரீ மகா பெரியதம்பிரான் சுவாமி ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமாகி பல பக்த அடியார்களால் வலம்வந்த பாற்குடபவனி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்து உற்சவ நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.

குறித்த ஆலயத்தின் அலங்காரத் திருவிழாவின் தேரோட்டம் (01.10.2022) சனிக்கிழமை காலையில் இடம்பெற இருப்பதுடன். அலங்காரத் திருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) புதன்கிழமை காலை இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றையதினம் நிறைவடையவும் இருக்கின்றது.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *