Latest News
Home / ஆலையடிவேம்பு (page 12)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு இன்று….

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் இந்த வருடத்திற்கான பிரமோற்சவப் பெருவிழா நேற்று (19.08.2023) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது. இன்று (20.08.2023) காலை 11.00 மணிக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா திரு.வே.சிவசம்பு வட்டவிதானை குடும்பத்தினர் பங்களிப்புடன் ஆலய மற்றும் உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ நாராயண சண்முகதாஸீஸ்வரக் குருக்கள் அவர்களினால் திருக்கொடியேற்ற நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கோலாகலமாக இன்று ஆரம்பம்…

அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்றைய தினம் (19.08.2023) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. குறித்த போட்டியானது அணிக்கு (11) பேர் கொண்ட 10 ஓவர்கள் கொண்டதான சுற்றுத்தொடராக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

பனங்காடு மாதுமை உடனுறை சமேத ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயதில் சித்தானைக்குட்டி சுவாமிகளின் குருபீட அடிக்கல் நாட்டு விழா….

சுவாமி சித்தானைக்குட்டி அவர்களின் குருபீடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) காலை சுப முகூர்த்த வேளையில் ஆலையடிவேம்பு பிரதேச, அருள்மிகு பனங்காடு மாதுமை உடனுறை சமேத ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் இடம் பெற்றது. சித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு வந்து பல சித்து விளையாட்டுக்களை காட்டியவராகவும் அண்மை பிரதேசமான காரைதீவில் ஜீவசமாதி கொண்டதுடன். முப்பெரும் சித்தர்களின் முதன்மையானவராகவும் காணப்படுகின்றார். ஆலையடிவேம்பு பிரதேச பனங்காடு, …

மேலும் வாசிக்க

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச வீதி ஓரங்களியில் மரக்கன்றுகள் நடுகை….

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று (18) காலை 9.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச, பனங்காடு சாகாமம் பிரதான வீதி ஓரங்களியில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் T.நவநீதராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் பிரதம …

மேலும் வாசிக்க

ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டின் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி….

அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த (05.08.2023) அன்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு சுற்றுப்போட்டிகள் இடம்பெற்று வந்தது. அந்த வகையில் இறுதிப்போட்டி நிகழ்வு நேற்றய தினம் (13) மாலை 3.30 மணியளவில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் புனிதராஜ் அவர்கள் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. நிகழ்வின், பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் அவர்கள் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் திரு.வே.சந்திரசேகரம் அவர்கள் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது. 20 வருடங்களாக சமூகத்திற்காக பல ஆன்மீகம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற அமைப்பென்ற ரீதியில் இடம்பெற்ற 20ஆம் ஆண்டு நிறைவு விழா, ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு பிரதான …

மேலும் வாசிக்க

ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டின் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி……

அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த (05) சனிக்கிழமை தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு சுற்றுப்போட்டிகள் இடம்பெற்று வருகிறது. குறித்த சுற்றுப்போட்டிக்காக ஜொலிபோய்ஸ் விளையாட்டு கழகத்தினரினால் தர்மசங்கரி விளையாட்டு மைதானம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டுள்ளதுடன் மைதானத்தில் காணப்படும் ஒரு சுவர் பகுதியினை அலங்கரிக்கும் முகமாக சுவர் ஓவியம் வரைந்திருப்பதும் காணக்கூடியதாக இருப்பதுடன் மேற்படி செயற்பாடுகள் சிறந்த …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று செம்போடியார் வீதியில் புதிய எயாட்டல் தொலைத்தொடர்பு கோபுரம்: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த சுவாமி விபுலானந்தா சிரேஸ்ட பிரசைகள் சங்கத்தினர்….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று செம்போடியார் வீதியில் எயாட்டல் டவர் (தொலைத்தொடர்பு கோபுரம்) புதிதாக அமைப்பதற்காக நேற்றய தினம் (08) அதிகமான வாகனங்களும் பணியாளர்களும் வருகைதந்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதால் சூழவுள்ள மக்களுக்கு நோய்களும் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சமடைந்து மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்கள். மேலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதனை தடுத்து நிறுத்துவதற்கு சுவாமி விபுலானந்தா சிரேஸ்ட பிரசைகள் சங்கத்தினர் பிரதேசத்தை சேர்ந்த அமைப்பென்ற அடிப்படையில் நேற்றய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி: பங்குபற்ற விரும்பும் அணிகள் பதிவுசெய்து கொள்ளலாம்…

  அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் (19.08.2023) சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச,அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது. குறித்த போட்டியானது அணிக்கு (11) பேர் கொண்ட 10 ஓவர்கள் கொண்டதான சுற்றுத்தொடராக இடம்பெற இருக்கின்றது. குறித்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமரில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவு செய்துகொள்ளவும் முடியும். மேலதிக விபரங்கள். …

மேலும் வாசிக்க

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் இன்று (06/08/2023) காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதான கட்டடத்தில் இடம்பெற்றது. ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக சமய செயற்பாடுகளில் அக்கறை காட்டிவரும் கழகமாகவும் பனங்காடு அக்னி விளையாட்டு கழகம் திகழ்கின்றது. இச் சீருடைக்கான நிதி பங்களிப்பினை …

மேலும் வாசிக்க