Latest News
Home / தொழில்நுட்பம் / அடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும்.

அடுத்த இரு நாட்களுக்கு உலக அளவில் இணைய சேவை பாதிப்பு ஏற்படும்.

டொமைன் சர்வர்கள் பராமரிப்புப் பணிகள் இன்று நடைபெற இருப்பதால் உலகம் முழுவதும்
இணைய சேவை பயன்படுத்துவர்களுக்கு இணைப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இந்த பழுதுபார்ப்பு பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

”உலக அளவில் இணையம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை பாதிப்பு நிகழலாம். நெட்வொர்க் கட்டமைப்புகளும் பாதிக்கப்படும்” என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (ICANN) என்ற அமைப்பு இந்த திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ளது.

இதன்மூலம் இணையத்தில் இருக்கும் தகவல்களை பாதுகாத்து வரும் cryptographic key மாற்றப்படும் என்று தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் இணையத்தளங்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் cryptographic key மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், டொமைனில் இருக்கும் பெயர்கள் மற்றும் தகவல்களை பாதுக்காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறப்படுகின்றது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய பக்கங்களை பெறுவது மற்றும் தகவல்கள் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *